நிர்வாக முகவரை கண்காணித்து வந்ததாக பாட்டாளிக் கட்சி வாதம்

நிர்வாக முகவரை கண்காணித்து வந்ததாக பாட்டாளிக் கட்சி வாதம்

1 mins read
2f7131d9-9043-4c14-8a99-76057fcd16c0
-

"பாட்டாளிக் கட்சியின் நகரமன்ற உறுப்பினர்கள் தங்களது நிர்வாக முகவரைக் கண்காணிக்க வழி காட்டி நெறிமுறைகள் வகுக்கப் பட்டிருந்தன," என்று பாட்டாளிக் கட்சி சார்பில் வழக்கின் தற்காப்பு வாதத்தை எடுத்து வைத்த வழக் கறிஞர் செல்வராஜா தெரிவித் துள்ளார். "எஃப்எம் சொலுயூஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் களான ஹாவ் வெங் ஃபான், டேனி லோ இருவரும் அல்ஜு னிட்=ஹவ்காங் நகரமன்றத்தில் மேலாண்மை பதவிகளில் இருந்த போதிலும் அவர்கள் நினைத்தபடி எல்லாம் பணப்பட்டுவாடா செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட வில்லை.

"இந்த நிலையில், பாட்டாளிக் கட்சி நகர மன்ற உறுப்பினர்கள் முறையில்லாமல் பணப் பட்டுவாடா செய்ததாகக் கூறமுடியாது," என் றும் திரு செல்வராஜா குறிப்பிட் டார். இதற்கு உதாரணம் காட்டிய அவர், நகரமன்றம் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்ப்பது எவ்வாறு என்பது குறித்தும் யாரிடம் எழுப்ப வேண்-டும் என்பதற்காக ஒரு நடைமுறையை பாட்டாளிக் கட்சி யின் முன்னாள் தலைவர் லோ தியா கியாங் அமல்படுத்தியிருந் ததைக் குறிப்பிட்டார். ஆனால், இது பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தையை மேற் கொள்ள உதவும் திட்டம் மட்டுமே என்று கேபிஎம்ஜி நிர்வாக இயக் குநர் ஓவன் ஹாக்ஸ் தெரிவித் தார். குடியிருப்புப் பேட்டையில் எழக்கூடிய பிரச்சினைகளை தீர்ப் பது குறித்து விரிவான நடைமுறை இருந்தபோதிலும் பேட்டை நிர்வா கம் அல்லது அதன் தொடர்பான கொள்கைகள் தீர்க்கமாக ஆலோ சிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று திரு ஹாக்ஸ் கருத்துரைத் தார்.