நெகிழி உறிஞ்சிகள் கொள்கையை மீறிய கிளை: விசாரிக்கும் கேஎஃப்சி

நெகிழி உறிஞ்சிகள் கொள்கையை மீறிய கிளை: விசாரிக்கும் கேஎஃப்சி

1 mins read
b02d4ef0-0b18-4a2d-b7cc-892b5eda09e4
-
Google News Preferred Icon

வாடிக்கையாளர்களுக்கு நெகிழி (பிளாஸ்டிக்) உறிஞ்சிகளை இனி வழங்கப்போவதில்லை என்று சிங்கப்பூரில் உள்ள கேஎஃப்சி விரைவு உணவக நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த விதிமுறையை அதன் கிளை ஒன்று மீறியிருப்பதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கேஎஃப்சி நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. கேஎஃப்சி உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கும் நெகிழி உறிஞ்சிகள் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்' எனும் அறிவிப்புக்குப் பக்கத்தில் நெகிழி உறிஞ்சிகள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டி ஒன்று இருப்பதைக் காட்டும் படம் இணையத்தில் நேற்று முன்தினம் வலம் வந்தது. தனது கிளைகள் அனைத்தும் இந்த விதிமுறையைக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக கேஎஃப்சி கூறியுள்ளது.