சிங்கப்பூரின் அருமை பெருமைகளை உலகிற்கு எடுத்துச்செல்ல $1 மி. நிதி

சிங்கப்பூரின் அருமை பெருமைகளை உலகிற்கு எடுத்துச்செல்ல $1 மி. நிதி

1 mins read
352708fc-23a0-4160-b72a-30c05e85a93d
-

சிங்கப்பூரின் அருமை பெருமைகளை உலக மக்களுக்கு எடுத்துச்செல்லும் உள்ளூர்ப் படைப்புகளை ஊக்குவிக்க சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் $1 மில்லியன் நிதியைத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரைப் புத்தாக்கமுறையில் சித்திரிக்கும் திரைப்படங்கள், காணொளிகள், கேலிச் சித்திரங்கள் ஆகியவற்றை இந்த நிதி ஆதரிக்கும் எனக் கழகம் நேற்று கூறியது. நிதியைப் பெற அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் விண்ணப்பம் செய்யலாம். சிங்கப்பூரைச் சேர்ந்த படைப்பாளர்கள் நிதியைப் பெற விண்ணப்பிக்கலாம்.

"சந்தைப்படுத்தும் உத்திகளில் நாங்கள் மேற்கொண்டு வரும் ஒரு பகுதியாக உள்ளூர் திறனாளர்களுக்கு ஆதரவு வழங்க விரும்புகிறோம். நமது மக்கள், உணர்வு, மனப்பான்மை ஆகியவற்றை மிகச் சிறந்த வகையில் காண்பிக்கும் படைப்புகளை உலக மக்களுக்குக் காட்ட விரும்புகிறோம்," என்று கழகத்தின் மின்னிலக்க, படைப்புகள் பிரிவின் இயக்குநர் திரு டெரன்ஸ் வூன் தெரிவித்தார். மேல்விவரங்களுக்கு கழகத்தின் இணையத்தளத்துக்குச் செல்லவும். அல்லது FAstFoward@stb.gov.sg எனும் மின்னஞ்சல் வாயிலாகக் கோரிக்கைகளை அனுப்பலாம். 2018-10-12 06:00:00 +0800