வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைப் புகைத்த குற்றத்தின் பேரில் 53 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் ஒரே நாளில் இருமுறை அதிகாரிகளிடம் அகப்பட்டுக்கொண்டார். இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்தது. 90 நிமிட இடைவெளியில் இந்தக் குற்றங்கள் புரியப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. பிடிபட்ட ஆடவருக்கு மொத்தம் $2,900 அபராதம் விதிக்கப்பட்டது. 2013, 2015ஆம் ஆண்டுகளில் இதே குற்றத்தை அந்த ஆடவர் புரிந்திருந்தார்.
வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்: ஒரே நாளில் இருமுறை சிக்கிய ஆடவர்
1 mins read
-

