போதைப் பொருள் உட்கொண்ட குற்றத்துக்காக சொகுசுக் கைக் கடிகார நிறுவனமான 'தி அவர் கிளாஸ்' நிறுவனத்தை நிறுவனர் களின் மகளுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. முன்னாள் மக்கள் தொடர்பு ஆலோசகரான 45 வயது ஆட்ரி டே மே லீ இரண்டு ஆண்டு களுக்கு மேலாக போதைப் பொருள் உட்கொண்டு வந்த தாகக் கூறப்படுகிறது. அவருக்கு 22 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் கவனமின்றி வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக வாகனம் ஓட்ட 18 மாதத் தடையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தமக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட போதைப் பொருள், கவனமின்றி வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டுகளைக் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதியன்று ஆட்ரி ஒப்புக் கொண்டார். 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் போதைப் பொருள் உட்கொண்டு, வாகனம் ஓட்டி போக்குவரத்து விளக்கு கம்பம் மீது மோதியதற்காக ஆட்ரி கைது செய்யப்பட்டார். பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் மீண்டும் போதைப் பொருள் உட்கொண்டார். மனநலக் கழகத்தில் தமது மனநலத்தை மதிப்பீடு செய்ய சென்றபோது அவர் போதைப் பொருள் உட்கொண்டு போதை யில் இருந்ததாக தெரிவிக் கப்பட்டது.
ஆட்ரிக்கு முன்று பிள்ளைகள் உள்ளனர். அவருக்கு மண முறிவான பிறகு மூத்த மகளை அவரது முன்னாள் கணவர் அழைத்துச் சென்றுவிட்டார். தமது மூத்த மகள் தம்மிடம் பாசம் காட்டாததால் ஆட்ரியின் மனநலம் பாதிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் திரு யூஜின் துரைசிங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆட்ரி தற்போது $80,000 பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார். தமக்கு எதிராக அளிக் கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய இருப்பதாக நம்பப்படுகிறது.

