வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்ற சீன நாட்டவர்கள் கைது

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்ற சீன நாட்டவர்கள் கைது

1 mins read
edbc453a-4fd0-4cc3-a60c-4e9d572968ca
-

'வீ சேட்' கைபேசி செயலி வாயிலாக வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்பனை செய்த நான்கு சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகள் நடத்திய வெவ்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இந்த நால்வரும் சிக்கியதாக சிங்கப்பூர் சுங்கத்துறை நேற்று காலை தெரிவித்தது. 692 அட்டைப் பெட்டிகள், 171 சிகரெட் பொட்டலங்கள், 13 சிகரெட் துண்டுகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள் வரி செலுத்தப்படாதவை. $60,560 வரியும் $4,440 பொருள், சேவை வரியும் செலுத்தப்படவில்லை என்று சுங்கத்துறை தெரிவித்தது. கைது செய்யப்பட்ட நான்கு ஆடவர்கள் பயன்படுத்திய கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் இருந்த $1,400 பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணம் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்பனை செய்து ஈட்டியதாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. உபி அவென்யூ 2இல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தி சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்தனர். PHOTO: SINGAPORE CUSTOMS