இவ்வாண்டின் ஆங்கில மொழிக்கான நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் விமர்சன சிந்தனை கொண்ட மாணவர்கள் வகுப்பறையில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் பல்வேறு கண்ணோட்டத்தில் சிந் தித்துக் கருத்துகள் கூற ஊக்குவிக்கும் அவசியத்தையும் வலியு றுத்தினர். ஆங்கில மொழி, ஆங்கில இலக்கியம், பொதுத்தாள் ஆகிய பாடங்களைப் போதிப்பதில் தலை சிறந்த ஒன்பது ஆசிரியர்களுக்கு பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா நேற்று விருதுகளை வழங்கினார்.
கெமிங் தொடக்கப்பள்ளியின் திருவாட்டி ஹெங் முயி ஹோங், நேவல் பேஸ் உயர்நிலைப் பள்ளி யின் திரு கஸ்மிர் காங் சூன் லியோங், செயின்ட் ஜோசஃப் கல்வி நிலையத்தின் திருமதி மிஷால் சுவா, இனோவா தொடக்கக் கல்லூரியின் திருவாட்டி பெர் னிஸ் இயோ, ஹுவா சோங் கல்வி நிலையத்தின் டாக்டர் ஆட்ரி சியோங் சுவெய் ஆகியோர் வகுப்பறையில் சிறந்த கற்பித்தல் திறனை வெளிப்படுத்தியதற்காக விருது பெற்றனர். நான்கு துறைத் தலைவர்களான யு நெங் தொடக்கப் பள்ளியின் திரு யோக் ஜூன் மெங், எவர் கிரீன் உயர்நிலைப் பள்ளியின் திரு ரதிஷ் பாலகிருஷ்ணன், தஞ் சோங் காத்தோங் பெண்கள் பள்ளியின் திருவாட்டி சீ பீ பயிக், தெமாசெக் தொடக்கக் கல்லூரி யின் திருவாட்டி எரின் எலிசபெத் ஊட்ஃபோர்ட் ஆகியோருக்குத் தலைமைத்துவ விருதுகள் வழங் கப்பட்டன. ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் வெற்றி விருது, சான்றிதழ், $2,000 பரிசு தொகை ஆகியவற்றைப் பெற்றனர்.

