நன்கொடை திரட்ட ஜோடிக்கு தடை உத்தரவு

1 mins read
5d1e5068-19e8-4e2a-8287-509096b001eb
-

உடற்குறையுள்ளோருக்கா ன பிடோக் இளையர் சங்கத்திற்காக நிதி திரட்டும் பெயரில் நன் கொடை வழங்குவோரிடமிருந்து கிட்டத்தட்ட $10,000 ஏமாற்றிய தற்காக ஒரு ஜோடிக்கு கடந்த மே மாதம் 36 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர்கள் மேற் கொண்டு தொண்டூழியம் தொடர்பில் எந்த ஒரு நிதி திரட் டிலும் ஈடுபடுவதைத் தடுக்கும் தடை உத்தரவை அறநிறுவன ஆணையர் நேற்று பிறப்பித்தார்.

இளையர் சங்கத்தின் முன் னாள் ஊழியர்களாக இருந்த நூர்யானா முகமது சாலே, 37, அவர் காதலர் ராஜ்சயிட் செடிக், 40 (படம்) இருவருக்கு எதிராக அறநிறுவனங்கள் சட்டத்தின் அடிப்படையில் இத்தடை உத் தரவு விதிக்கப்பட்டது. சை சீ சாலையில் உள்ள அத்தொண்டூழிய நல அமைப்பின் அலுவலகத்திலிருந்து 2012ஆம் ஆண்டில் இருவரும் வேலையை விட்டுச் சென்றனர். இருவரும் அங்கிருந்த ரசீது புத்தகங்களைத் திருடி அவற் றைப் பயன்படுத்திப் பலரையும் நன்கொடை வழங்கச் செய்து ஏமாற்றினர்.