பாம்பால் தாக்கப்படும் சம்பவங்கள் அரிதாக நடந்தாலும் பொதுவாகவே இந்த ஊர்வனவகை பொதுமக்கள் அருகே அண்டாது. தன் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்போது மட்டுமே மலைப் பாம்பு தாக்கக்கூடும் என்று கூறப் படுகிறது. செம்பவாங் குடியிருப்பு வட் டாரத்தில் செவ்வாய்க்கிழமை அதி காலை நான்கு மணிக்கு தம் முடைய பூனையைத் தேடிச் சென்ற ஒரு பெண்ணை மலைப்பாம்பு ஒன்று கடித்ததன் தொடர்பில் நிபுணர்கள் இக்கருத்தைக் கூறி உள்ளனர். வீவக கட்டடத்தின் இரண் டாம் மாடியில் பெண்ணின் இடது காலை மலைப்பாம்பு கடித்ததில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இயற்கைச் சூழலில் வாழ்ந்து வரும் இத்தகைய மலைப்பாம்புகள் அங்கு நடக்கும் மனிதனின் நட வடிக்கைகளால் வெளியேற்றப்பட்டு இவ்வாறு குடியிருப்புப் பேட்டை களுள் வந்துவிடுவதாக வன விலங்கு நிபுணர்கள் கூறுகின் றனர்.
மலைப்பாம்புகள் மட்டுமின்றி பொதுவாகவே எல்லா பாம்பு இனங்களும் மனிதர்களை எதிர்ப் பவை அல்ல. இருப்பினும் மிக அருகில் வந்து மனிதன் மிரட்டல் அளிப்பதாக இருந்தால், பாம்பு தன்னைத் தற்காத்துக்கொள்ளவே வந்தவரைக் கடிக்க முற்படும் என்றார் வனவிலங்கு ஆலோசகர் சுபராஜ் ராஜதுரை.
(இடது படம்) பாம்பு பிடிக்கும் ஊழியர்கள் சாக்கடைக்குள் மறைந்து இருந்த மலைப்பாம்பை வெளியே கொண்டு வருகின்றனர். (வலது படம்) அங்குள்ள வீவக கட்டடத்தின் 2ஆம் மாடியில் உள்ள மாது ஒருவரை அந்தப் பாம்பு கடித்துவிட்டது. படங்கள்: சான் இன் ஹா

