அதிர்ஷ்டக் குலுக்கை ரத்து செய்த நிறுவனம்

அதிர்ஷ்டக் குலுக்கை ரத்து செய்த நிறுவனம்

2 mins read
Google News Preferred Icon

'தி கிவன் கம்பெனி' எனப்படும் சமூக நிறுவனம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டபோது, பொது மக்கள் நன்கொடை வழங்க முன் வருவதை ஊக்குவிக்க அவர் களுக்கு அதிர்ஷ்டக் குலுக்குவழி மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் பரிசாக வழங்கும் என்று உறுதி அளித்து இருந்தது. ஆனால், அதிர்ஷ்டக் குலுக் கலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அதை ரத்து செய்துவிட்டதாகவும் இதுவரை நன்கொடை அளித்தவர்களுக்கு அவரவர் தந்த தொகை மீண்டும் திருப்பிக் கொடுக்கப் படுவதாகவும் நிறுவனம் செவ் வாய்க்கிழமை அன்று அறிவித் தது.

அதிர்ஷ்டக் குலுக்கல் தொடர் பான ஊடகச் செய்திகளும் சர்ச் சைகளுமே ரத்து செய்யப்படுவதற் கான காரணங்கள் என்று நிறுவனத்தைத் தொடங்கிய சார்ல்ஸ் டான், நன்கொடை அளித்தவர்களிடம் குறிப்பு மூலம் தெரிவித்திருந்தார். அத்துடன் திட்டமிட்டபடி மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாகக் கொடுக்க முடியாததற் கும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட வருத்தத்திற்கும் திரு டான் மன்னிப்பு கேட்டுக் கொண் டார். தொண்டூழியச் சங்கங்களுக்கு நிதி திரட்ட உதவும் முயற்சியாக திரு டான் அதிர்ஷ்டக் குலுக்கல் வழி பரிசு வழங்கும் வித்தியாசமான திட்டத்தைத் தொடங்கினார்.

இருப்பினும் இப்புதுவகை அணுகுமுறை ஒருவர் மனதார நன்கொடை அளிக்கும் நோக்கத்தைச் சரியாக வலியுறுத் தவில்லை என்று அறநிறுவன ஆணையாளர் மற்றும் அறநிறுவன மன்றம் வெகுவாக விமர்சித்து வந்தன. முன்னரே தேர்ந்தெடுத்த தொண்டூழியக் குழுக்களுக்குச் சேர வேண்டிய நிதியை மீண்டும் திரட்டித் தரும் என்றும் நிறுவனம் கூறியது. தொகை $13,000ஆக இருக் கும் என்று கூறப்பட்டது.