$15,600 மதிப்புள்ள கஞ்சா சிக்கியது

$15,600 மதிப்புள்ள கஞ்சா சிக்கியது

1 mins read
7d468016-a4ae-4d20-8d6d-eef85773fcd0
-

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி யில் 400க்கு மேற்பட்ட கிராம் எடை உள்ள கஞ்சா மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டது. அந்த கார் நேற்று முன்தினம் இரவு 7.40 மணிக்கு உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குள் வந்தது. வழக்கம்போல குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத் தின் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர். சோதனையின்போது, காரின் பின் இருக்கையில் கறுப்பு நிறத்தி லான பொட்டலம் ஒன்று இருப் பதைக் கண்டனர். அதில் 475 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது. அதன் மதிப்பு $15,600 (வலது படம்). போதைப் பொருளை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்த குற்றத்தின் பேரில் 27 வயது மலே சிய ஆடவர் கைது செய்யப் பட்டார்.