பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் திட்டங்கள் விரைவில் அறிமுகம்

பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் திட்டங்கள் விரைவில் அறிமுகம்

2 mins read
Google News Preferred Icon

நாள்தோறும் மக்களின் பயணங்க ளைச் சிறப்பான முறையில் நடத்தி தரும் பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக் கும் வகையில் நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்துடன் கைகோத்து சில தொடர் திட்டங்களை அறிவிக்க விருக்கிறது. முதலாவதாக, தங்களின் அன் றாட பயணங்களின்போது பொதுப் போக்குவரத்து ஊழியர்களைச் சந்திக்கும் பொதுமக்கள் அவர்க ளுக்கு வணக்கம், நன்றி போன்ற கனிவான சொற்களைப் பயன் படுத்த இயக்கம் ஊக்குவிக்கும். போக்குவரத்து மற்றும் கலாசார, சமூக, விளையாட்டுத் துறை அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் இம்மாதம் 21ஆம் தேதி யன்று தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையம், பேருந்து சந்திப்பு நிலை யம் ஆகியவற்றுக்குச் சென்று பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக் கும் இயக்கத்தைத் தொடங்கி வைப்பார்.

இந்த இயக்கத்தில் வெளிப்புற விளம்பர சுவரொட்டிகள், நடை பாதை பதாகைகள், பேருந்து விளம்பரங்கள் ஆகியவற்றுடன் மின்னிலக்க முறையிலும் பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கும் முறை களும் வெளியிடப்படும். "பொதுமக்களை மையமாகக் கொண்ட பொதுப் போக்குவரத்து முறையில் நமது பொதுப் போக்கு வரத்து ஊழியர்கள்தான் முதுகெ லும்பாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் 24 மணிநேரமும் நமக்கு பாதுகாப்பான, நம்பகத்தன்மை யான, சொகுசான பயணங்களை அளிக்க அரும்பாடு படுகிறார்கள்.

"நாம் நமது பயணத்தை மேற் கொள்ளும்போது அந்தப் பயணத் தின் முக்கிய நபர்களான பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்வோம்," என்றார் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை நிர்வாகி திரு நியன் ஹூன் பிங். மேலும், சமூக, வர்த்தக அமைப் புகளுடன் இணைந்து ஆணையம், உலக ரொட்டி தினத்தை முன் னிட்டு புக்கிட் பாஞ்சாங், ஜூரோங் ஈஸ்ட், பீஷான், பொங்கோல் சந் திப்பு நிலையங்களில் இம்மாதம் 16ஆம் தேதி பொதுப் போக்குவ ரத்து ஊழியர்களுக்கு நன்றி தெரி விக்கும் வாசகங்களைப் பயணி கள் எழுத ஊக்குவிக்கும்.