பாலர் பள்ளியிலிருந்து தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் மாணவர் களுக்கும் அவர்களைத் தயார் படுத்தும் பெற்றோர்களுக்கும் பல தகவல்களை அளிக்கும் நடவ டிக்கை புத்தகம் ஒன்றை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற கல்வி அமைச்சு பணித் திட்டக் கருத்தரங்கில் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், பெற்றோர்கள் - பிள்ளைகள் கலந்துரையாடல் களுக்கு உதவும் குறிப்புகள், அவர்களுக்கிடையே ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். இந்தக் குறிப்புகள் தொடக்கப் பள்ளியில் அந்த மாணவர்கள் மேற்கொள்ளக்கூடிய அன்றாட நடவடிக்கைகளுக்குத் தங்களை மாற்றிக் கொள்ள உதவும். தொடக்கநிலை ஒன்றாம் வகுப் பின் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த நடவ டிக்கை புத்தகத்தின் ஒரு பிரதி வழங்கப்பட்டது. பள்ளி முதல் நாளான நேற்று யீஷூனில் அமைந்துள்ள அஹமட் இப்ராஹிம் தொடக்கப்பள்ளிக்கு வந்த தற்காலிக கல்வி (பள்ளிகள்) அமைச்சர் இங் சீ மெங்கும் கல்வி அமைச்சின் நாடாளுமன்றச் செய லாளர் டாக்டர் முகம்மது ஃபைசல் இப்ராஹிமும் அங்குள்ள மாணவர் களிடமும் பெற்றோர்களிடமும் உரையாடினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இங், "தங்கள் பிள்ளைகளின் கல்வி தொடர்பான அம்சங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆசிரியர்களுடன் இன்னும் அணுக்கமாக பங்கேற்க வேண்டும்," என்றார்.
பெற்றோர்- பிள்ளைகளுக்கு உதவ புதிய நடவடிக்கை நூல்
1 mins read
-

