விக்ரம் பிரபு காவல்துறை அதிகாரியாக மிரட்டியுள்ள படம்

விக்ரம் பிரபு காவல்துறை அதிகாரியாக மிரட்டியுள்ள படம்

1 mins read
d11520e1-cdc2-43c7-a28a-ed2813d453e9
-

'துப்பாக்கி முனை' படத்திற்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து படம் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இப்படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கி உள்ளார். விக்ரம் பிரபு, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர். அண்மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் விக்ரம் பிரபு. குறிப்பிட்ட ஒரு வழக்கால் இவரது வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு திருப்பங்களை விவரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். முத்து கணேஷ் இசையமைத்துள்ளார். "இந்தப் படம் எனது திரை வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக அமையும் என நம்புகிறேன். அதற்கேற்ப ஒவ்வொரு காட்சியையும் கச்சிதமாகச் செதுக்கி உள்ளார் இயக்குநர் தினேஷ் செல்வராஜ். பாடல்கள் அனைத்தும் இளையர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. திரைக்கதையும் விறுவிறுப்பாக இருப்பது கூடுதல் பலம்," என்கிறார் விக்ரம் பிரபு.