அனுகூலங்களை வளர்ச்சி வாய்ப்புகளாக ஆக்குவோம்

அனுகூலங்களை வளர்ச்சி வாய்ப்புகளாக ஆக்குவோம்

1 mins read

உலகளவில் தன்னைப்பேணித் தனம் அதிகரிக்கிறது. மின்னிலக் கப் பொருளியல் தலைதூக்குகிறது. இதனால் சிங்கப்பூர் பொருளிய லுக்குப் பெரும் சவால்கள் ஏற்படு கின்றன. இருந்தாலும் சிங்கப்பூர் தன் னுடைய உள்நாட்டு மற்றும் வட்டார அனுகூலங்களை வளர்ச்சி வாய்ப்பு களாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் அறை கூவல் விடுத்து இருக்கிறார். சிங்கப்பூர் பொருளியல் கொள் கைக் கருத்தரங்கு மாண்டரின் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடந்தது.

அதில் கலந்துகொண்ட கல்வித் துறையினர், தொழில்துறை நிபு ணர்கள், பொருளியல் வல்லுநர்கள் ஆகியோரிடையே 47 நிமிடம் திரு சான் உரையாற்றினார். சிங்கப்பூர் எதிர்நோக்கக்கூடிய சவால்களை அமைச்சர் விளக் கினார். சிங்கப்பூர் வெற்றிகரமான எதிர்காலத்தைப் பெறுவதை உறு திப்படுத்த தேவைப்படும் முக்கிய மான பல உத்திகளைத் திரு சான் பகிர்ந்துகொண்டார். ஆசியாவிலும் ஆசியான் நாடு களிலும் தன்னுடைய தொடர்பு களை சிங்கப்பூர் பலப்படுத்திக் கொள்ளவேண்டும். கணினித் தகவல்கள், ஆற்றல், நிதிவளம், வர்த்தகம் போன்ற துறைகளில் தனக்குள்ள ஆற்றல் வளத்தை சிங்கப்பூர் மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அமைச் சர் குறிப்பிட்டார்.