மோட்டார் சைக்கிளோட்டி டாக்சி கதவில் மோதினார்: இருவர் காயம்

மோட்டார் சைக்கிளோட்டி டாக்சி கதவில் மோதினார்: இருவர் காயம்

1 mins read

சிலேத்தார் விரைவுச்சாலையில் ஒரு கார், ஒரு டாக்சி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்து புதன்கிழமை காலை சுமார் 7.20 மணிக்கு நிகழ்ந்தது. அதில் மோட்டார்சைக்கிளோட்டிகள் இரண்டு பேர் காயம் அடைந்தனர். கம்ஃபர்ட் நிறுவனத்தின் டாக்சி ஓட்டுநர் ஒருவர், தன்னுடைய வாகனத்தின் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கியதையும் அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் ஒன்று டாக்சி கதவில் மோதி சறுக்கிக்கொண்டு கீழே விழுந்ததையும் Roads.sg என்ற இணையத் தளத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி காட்டியது.

அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த வேறு ஒரு மோட்டார்சைக்கிள் முதல் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. காயம் அடைந்த இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு வயது 20 மற்றும் 27. அவர்கள் இருவரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட தாக போலிஸ் தெரிவித்தது. புலன்விசாரணை நடக்கிறது.