சக ஊழியரைத் தாக்கிய கட்டொழுங்கு காவலருக்குத் தண்டனை

சக ஊழியரைத் தாக்கிய கட்டொழுங்கு காவலருக்குத் தண்டனை

1 mins read

ஒரு மதுபான கடையில் கட்டொழுங்குக் காவலராக பணி யில் இருந்த ஏரூன் முகம்மது இஸ்கந்தர், 36, என்பவர், ஆரோன் லிம் சூன் லெங், 37, என்ற தன் சக ஊழியர் வேலை செய்த விதம் பிடிக்காததால் அவரைத் தாக்கிவிட்டார். கடுமையான காயத்தை ஏற்படுத்திவிட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹரூனுக்கு இரண்டாண்டுச் சிறை, மூன்று பிரம்படித் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் சென்ற ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி சிலிகி ரோட்டில் இருக்கும் பார்க்லேன் ஷாப்பிங் மால் கட்டடத்தில் செயல்படும் ஐகான் II என்ற இரவுநேர விடுதியில் நிகழ்ந்தது. கடந்த 2016 பிப்ரவரி 14ஆம் தேதி வேறு ஒருவரை ஹரூன் தாக்கியதாகக்கூறும் ஒரு குற்றச்சாட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.