52 வாரங்களில் இல்லாத அளவுக்கு சிங்கப்பூர் பங்குகள் வீழ்ச்சி

52 வாரங்களில் இல்லாத அளவுக்கு சிங்கப்பூர் பங்குகள் வீழ்ச்சி

1 mins read

அமெரிக்க பங்குச்சந்தை நிலவரத்தையொட்டி நேற்று சிங்கப்பூரில் பங்கு விலைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்தன. சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பரபரப்பாக விற்பனையாகி வரும் பங்குகளில் மூன்றில் ஒரு பகுதி பங்குகள், 52 வார காலத்தில் இல்லாத அளவுக்கு இறங்கின. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 3,000 அளவைவிட குறைந்தது. இந்தக் குறியீடு 1.08% அல்லது 32.75 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 2,999.33 ஆக இருந்தது.

இதற்கு முன்பு 2017 ஜனவரியில்தான் இந்த குறியீடு 3,000 அளவுக்கும் கீழே இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. கெப்பல் கார்ப்பரேஷன், சிட்டி டெவலப்மண்ட்ஸ், ஜென்டிங் சிங்கப்பூர், கோல்டன் அக்ரி ரிசோசர்ஸ், ஓசிபிசி வங்கி முதலானவற்றின் பங்குகள் 52 வார காலத்தில் இல்லாத அளவுக்கு இறங்கிய பங்குகளில் உள்ளடங்கும். டாலர் மதிப்பை பார்க்கையில் ஜோர்டைன் மெத்திசன் நிறுவன பங்குகள்தான் மிகப் பெரிய இழப்பைச் சந்தித்தன.