மின்னணுவியல் துறையை மேம்படுத்தும் புதிய 'என்யுஎஸ்' ஆய்வுக்கூடம்

மின்னணுவியல் துறையை மேம்படுத்தும் புதிய 'என்யுஎஸ்' ஆய்வுக்கூடம்

1 mins read

மின்னணுவியல் துறையை மேம்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் புதிய ஆய்வுக்கூடம் ஒன்று நேற்று திறக்கப்பட்டது. அதனுடன் துறையில் கூடுதல் திறனாளிகளை ஈர்ப்பதற்காக $1.5 மில்லியன் உபகாரச் சம்பளத்திட்டமும் அறிவிக்கப்பட்டது. 'அப்ளைட் மெட்டீரியல்ஸ்' எனப்படும் அமெரிக்க சாதனங்களின் நிறுவனமும் என்யுஎஸ்ஸும் இணைந்து இந்த ஆய்வுக்கூடத்தை அமைத்துள்ளன. இதில் 50க்கு மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், பொறியியலாளர்கள், முனைவர் பட்டத்துக்காக பயிலும் மாணவர்கள் ஆகியோர் பயிற்சி பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. ஆய்வுக்கூடத்தைத் திறந்து வைத்துப் பேசினார் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட். சிங்கப்பூரின் உற்பத்தித் துறையில் மின்னணுவியல் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 விழுக்காட்டுக்கு மேல் அதை நம்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.