தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மது கலந்த ஐஸ்கிரீம் விற்பனை குறித்து அமைச்சு மறுபரிசீலனை

1 mins read
4df2dea4-8803-4042-87ed-c07b6837b710
-

இரவு 10.30 மணிக்கு மேல் மதுபான விற்பனை சிங்கப்பூரில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 0.5 விழுக்காட்டுக்கு மேல் மதுபானம் கலந்த ஐஸ்கிரீமை விற்பனை செய்வது குறித்து அதே கட்டுப்பாடு இனி நீக்கப்படலாம். மதுபானம் கலந்த உணவுப்பொருள்கள் விற்கப்படுவது குறித்து உள்துறை அமைச்சு வர்த்தக, தொழில் அமைச்சுடனும் தொழில்துறை பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது. அளவுக்கு மீறிய மதுபானத்தை அருந்தும் சாத்தியம் இவ்வுணவுப்பொருட்களால் ஏற்படாததால் இவற்றுக்கு விலக்கு அளிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்