மின்சார வாகனங்களுக்காக கூடுதல் மின்னூட்டு இடங்கள்

மின்சார வாகனங்களுக்காக கூடுதல் மின்னூட்டு இடங்கள்

1 mins read

மின்சார வாகனங்களுக்கான மின்னூட்டு இடங்களை 2020 ஆம் ஆண்டுக்குள் 1,000 ஆக்க 'எஸ்பி' குழுமம் திட்டமிட்டுள்ளது. இவற்றைத் தீவு முழுவதும் துரித மாகப் பொருத்தி வருகிறது குழுமம். ஏற்கெனவே ஜூன் மாதத்தில் குறிப்பிட்டிருந்த எண் ணிக்கையைவிட இது இரு மடங்கு என்று அறியப்படுகிறது. இவற்றில் 250 மின்னூட்டு இடங்கள் அதிக மின்சக்தி வாய்ந்தவை என்றும் அரை மணி நேரத்தில் வாகனத்திற்கு முழு மின்னேற்றத்தைச் செய்திடும் என்றும் கூறப்படுகிறது. பேருந்துகள், சரக்கு வாகனங் கள் போன்ற பலதரப்பட்ட வாகனங்களுக்கும் இத்தகைய மின்னூட்டுச் சேவைகள் வழங்கத் திட்டமுள்ளதாக 'எஸ்பி' குழுமம் தெரிவித்திருந்தது.

"மின்னூட்டு உள்கட்டமைப்பு இல்லாத நிலையில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தத் தயக்கம் நிலவி வருகிறது. எனவே இதுபோன்ற மின் னூட்டு இடங்களை அமைப்பதில் அதிக அளவில் முதலீடு செய் யப்பட்டுள்ளது. இதனால் நினைத்த நேரத்தில் சிங்கப் பூரர்களுக்கு மின்சார மின்னூட்டு கிடைக்கும் சாத்தியம் அதிகரிக் கும்," எனக் குழுமத்தைச் சேர்ந்த கோ சீ கியொங் கூறினார். சாதாரண மின்னூட்டு இடம் $5,000 என்றும் அதிவிரைவான மின்னூட்டு இடம் $65,000 என்றும் கூறப்படுகிறது. இதன் தொடர்பில் 30 மின்னூட்டு இடங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் இயங்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப் பட்டது.