கத்தியால் குத்தி ஆடவருக்கு மரணம் விளைவித்தமைக்காக 36 வயதான சன்னாசி நாக ரத்தினத்திற்கு ஏழாண்டு சிறைத் தண்டனையும் எட்டுப் பிரம்படி களும் விதிக்கப்பட்டன. மகிழ்ச்சியாகத் தொடங்கிய புத்தாண்டு கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு மண்டாய் ரோட்டில் உள்ள ஒரு கூடைப் பந்துத் திடலில் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களைச் சுற்றியிருந்தவர்கள் மீதும் பீரைப் பீய்ச்சியடித் ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்கு அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த சன்னாசி மீதும் அவரின் நண்பர்கள் மீதும் பீர் பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களுக்கு இடையே மோதல் வெடிக்க, அக்கம்பக்கம் இருந்தவர்கள் குறுக்கிட்டு அவர்களைச் சமா தானப்படுத்தினர். இருப்பினும் கோபம் தீராத சன்னாசி, புளோக் 'சி'யில் உள்ள தமது அறைக்குச் சென்று ஒரு தடியையும் 32.7 செ.மீ. நீளமுள்ள கத்தி ஒன்றையும் எடுத்து வந்ததாகச் சொல்லப்பட்டது.
அதே புளோக்கை நோக்கி வந்துகொண்டிருந்த திரு கணேசன் பாலமுருகன், 23, என் பவரின் வயிற்றில் சன்னாசி கத்தியால் குத்தினார். அதைப் பார்த்த சிலர் ஓடி வந்து சன்னாசியைக் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனாலும் திமிறிக்கொண்டு எல்லா திசைகளிலும் அவர் கத்தியைச் சுழற்றியபடி இருந்ததாகக் கூறப்படுகிறது.

