சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி வேகத்தைக் குறைப்பது நாட்டின் வருவாய் ஏற்றத்தாழ்வைப் போக்க உதவாது என்றும் வளர்ச் சியை வேண்டுமென்றே குறைத் தால் ஒவ்வொருவரையும் அது மோசமாக்கிவிடும் என்றும் மனித வள அமைச்சர் ஜோசஃப்பின் டியோ தெரிவித்து இருக்கிறார். அப்படி ஒரு காரியத்தைச் செய்தால் அடித்தட்டு நிலையில் இருப்பவருக்குத்தான் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று திருவாட்டி டியோ குறிப்பிட்டார். அவர்களுக்கு வேலை போய் விடும். வருவாய் குறைந்துவிடும். அதேவேளையில், அதிக ஆற்றலு டன் தொழில்முனைப்புத் திறமை யுடன் உயர்நிலையில் இருப்பவர் கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள சாதகமான சூழ்நிலை ஏற்படும் என்றார் அமைச்சர்.
கொள்கை ஆய்வுக் கழகத்தின் 30வது ஆண்டுவிழாவைக் கொண் டாடுவதற்காக ஒரு மாநாடு நடத் தப்பட்டது. அம்மாநாட்டையொட்டி குழு விவாதிப்புக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் திருவாட்டி டியோ உரையாற்றினார். வளர்ச்சி வேகத்தைக் குறைத்து அதை மெதுவாக ஆக்கினால் பின்தங்கி இருப்பவர்கள் முன்னுக்கு வந்துவிடமுடியும் என்று கூறுவது வருமான ஏற்றத் தாழ்வைப் போக்குவதற்கான தீர்வாக ஒலிக்கக்கூடும். ஆனால் அந்த யோசனை நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று அமைச்சர் எச்சரித்தார்.

