'கோரப்படும் நிதித் திரட்டு பாட்டாளிக் கட்சிக்கு அல்ல'

'கோரப்படும் நிதித் திரட்டு பாட்டாளிக் கட்சிக்கு அல்ல'

2 mins read

சிவில் வழக்குகளில் சம்பந்தப் பட்டுள்ள தனது மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக் காகவும் பாட்டாளிக் கட்சி நிதி திரட்டவில்லை என்று நேற்று அறிக்கை வெளியிட்டது. முறையற்ற வகையில் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் பணத்தை நிர்வகித்த சிவில் வழக்குகளில் சிக்கியிருக் கும் பாட்டாளிக் கட்சியின் தலைவி சில்வியா லிம், பொதுச் செயலாளர் பிரீத்தம் சிங், முன்னாள் தலைவர் லோ தியா கியாங் ஆகியோர் மீது இரு வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளன. இதுவரை வழக்காடுவதற்கு உண்டான செலவுகளைச் சமாளிக்கப் பொதுமக்களிடம் நிதி கோரி இருந்தனர்.

அவர்கள் புதன்கிழமை இணையத்தளத்தின்வழி வழக் காடவும் திவாலாகும் நிலையைச் சமாளிக்கவும் பணத்தேவை குறித்துத் தெரிவித்தனர். இதன் தொடர்பில் வியாழக் கிழமை இரவு பத்து மணிவரையில் அவர்களது 'இன் குட் ஃபேய்த்' எனும் வலைப்பதிவில், 2,832 பேரிடமிருந்து மொத்தம் $477,653 திரட்டப்பட்டதாக அறியப்படுகிறது. மூவரும் நிதி கோரியுள்ளது அவர்களது தனிப்பட்ட செயல் என்றும் அதில் பாட்டாளிக் கட் சிக்குப் பங்கில்லை என்றும் கட்சி ஃபேஸ்புக் பகிர்வு வழி தெரிவித்தது.

அத்துடன் பாட்டாளிக் கட்சி சார்பாக நன்கொடை கோரு வோரிடம் பணம் அளிப்பதில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கட்சி கூறியது. இத்தனிப்பட்ட நிதி திரட்டுக் குப் பாட்டாளிக் கட்சியின் சின் னத்தையோ கட்சியைப் பிரதி நிதிக்கும் எவ்வித வேண்டு கோளையோ விடுக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டது. வழக்காடுவதற்கான செலவு கள் அதிகரித்து வர, தங்களின் தனிப்பட்ட வளங்கள் குறைந்து வருவதாக மூன்று பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களும் கூறி இருந்தனர். இதுவரை மூவரும் தங்கள் மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகின்றனர்.