பக்கத்தில் அமர்ந்து வந்த பெண் பயணியைப் பலமுறை மானபங்கம் செய்த பகுதிநேர 'கிராப்ஹிச்' ஓட்டுநருக்கு நேற்று மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய நாட்டவரான 47 வயது கலியபெருமாள் பன்னீர்செல்வம் மானபங்கம் தொடர்பான ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அத்துடன் தண்டனை விதிப்பின்போது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன. இவ்வாண்டு ஜனவரி 15ஆம் தேதியன்று புக்கிட் பாத்தோக்கில் 17 வயது மாணவியைத் தம் வாகனத்தில் ஏற்றிக்கொண்ட கலியபெருமாள் மேலும் இரு பயணிகளை ஏற்றவிருப்பதால் மாணவியைத் தம்மருகில் உட்காரச் சொன்னார். பின், அவரை மானபங்கம் செய்வதில் ஈடுபட்டார். வண்டியிலிருந்து இறங்கிய மாணவி தம் காதலனிடம் இதுகுறித்து கூறியபின், மறுநாள் போலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
பயணியை மானபங்கம் செய்த 'கிராப்ஹிச்' ஓட்டுநருக்குச் சிறை
1 mins read

