தீபாவளி குதூகலத்தை தூண்டிய தொண்டூழியம்

தீபாவளி குதூகலத்தை தூண்டிய தொண்டூழியம்

1 mins read
0710d802-b007-4c83-a77a-e49bd4abfba6
-

தீபாவளி நெருங்க நெருங்க, வார இறுதி நாட்களில் சிலர் வீட்டைச் சுத்தம் செய்வதிலும் பண்டிகைக் குத் தேவையான பொருட்களை வாங்குவதிலும் மும்முரமாக இருப் பர். ஆனால் சில நல்லுள்ளங்கள் தங்களின் வீடுகளை ஒளியூட்டும் அதே வேளையில் மற்றவர்கள் வீட் டிலும் ஒளியூட்ட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதியன்று முறுக்கு சுட முன்வந்தனர்.

முறுக்கு மாவைப் பிசைந்து, அச்சில் அதை இட்டு, சட்டியில் சுட்டு முறுக்குகளை டப்பாக்களில் வைக்கச் சுமார் 120 தொண்டூழியர் கள் அங்கு ஒன்றுகூடினர். காலை முதல் மாலை வரையில் கிட்டத்தட்ட 1,300 டப்பாக்களில் முறுக்குகளை நிரப்புவது இவர் களின் இலக்காக இருந்தது. இந்த முயற்சி 'இதயங்களுக்கு ஒளியூட்டுதல், இல்லங்களுக்கு ஒளியூட்டுதல்' (Lighting Hearts, Lighting Homes) எனும் வசதி குறைந்த குடும்பங்களுக்குத் தீபாவளியின்போது அன்பளிப்பு பொருட்களைக் கொடுக்கும் திட் டத்தின் ஓர் அங்கமாகும்.

தொண்டூழியர்கள் வைஷாக் பிள்ளை, அஷ்வின் உன்னிதன், அர்ச்சனா கோப்பகுமார் (இடமிருந்து) தெண்டாயுதபாணி கோயிலில் முறுக்கு மாவை அச்சிலிருந்து பிழிகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்