சில்க் ஏர்: சோதனை முடிந்தது

சில்க் ஏர்: சோதனை முடிந்தது

1 mins read

'சில்க் ஏர்' விமானங்களின் சோதனை முழுமையடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தோனீ சியாவில் 'லயன் ஏர்' விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து தங்களுடைய போயிங் விமானங்களையும் 'சில்க் ஏர்' சோதனையிட்டது. சில்க் ஏர் நிறுவனத்திடம் 'பி- 737 மேக்ஸ் 8' ரக விமானங் கள் 5ம் 'பி737-800' ரக விமானங்கள் 17ம் உள்ளன. "எல்லா விமானங்களும் முழு சோதனைக்கு உட்படுத்தப் பட்டன," என்று சில்க் ஏர் தெரி வித்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' குறிப்பிட்டது. மேலும் விமானத்தின் நம்பகமற்ற வேகத்திற்கு வழக்கத்திற்கு மாறான நடைமுறைகளை பரி சீலனை செய்ய விமானிகளுக்கு நிர்வாகம் நினைவூட்டியுள்ளது.