பெரியவர்கள் அதிகமாக வாசிப் பது இணைய செய்திதான் என்றும் பிரபலமான செய்திப் பதிப்பாளர் களின் செய்திகளையே இணை யத்தில் அவர்கள் வாசிப்பதாகவும் நீல்சன் ஆய்வு தெரிவிக்கிறது. ஆங்கில நாளிதழ்களில் அதிகம் வாசிக்கப்படும் நாளிதழாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தொடர்ந்து இருந்து வருகிறது. மொத்த வாசகர்களின் சரா சரியாக 29.8 விழுக்காட்டினர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் அச்சுப் பிரதி, இணையப் பிரதி இரண்டுமாகச் சேர்ந்து அன்றாடம் வாசிக்கின்றனர் என்று 2018 சிங்கப்பூர் ஊடகக் குறியீட்டு அறிக்கையை வெளியிட்டு நீல்சன் தெரிவித்தது. சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சின் முக்கிய நாளிதழான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் இணைய வாசகர் எண்ணிக்கை 413,000ல் இருந்து 597,000ஆக கடந்த ஆண்டு உயர்ந்தது. இது அதன் அச்சுப் பிரதிக்கு ஈடான எண்ணிக்கையாகும்.
இணையம் வழி செய்தி வாசிப்பது அதிகரிப்பு
1 mins read

