பள்ளி நேரடிச் சேர்க்கை முறையில் மாற்றங்கள்

பள்ளி நேரடிச் சேர்க்கை முறையில் மாற்றங்கள்

1 mins read

மாணவர்களுக்குப் பிடித்தமான துறைகளுக்குத் தேவையான திறன்களை மேம்படுத்த ஊக்குவிக்கவும் அவர்களது திறன்களை மேம்படுத்த மேலும் பல வழிகளை உருவாக்கவும் பள்ளி நேரடிச் சேர்க்கைப் பயிற்சியிலும் பல்கலைக்கழகச் சேர்க்கை மதிப்பீட்டுத் திட்டத் திலும் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து பள்ளி நேரடிச் சேர்க்கை மூலம் மாணவர் களைச் சேர்த்துக்கொள்ளும் உயர் நிலைப்பள்ளிகள் மையப்படுத்தப் பட்ட இணையவாசல் ஒன்றைப் பயன்படுத்தும். இதன் மூலம் மாணவர்கள் ஒரே ஓர் இணையப் படிவம் மூலம் பல பள்ளிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

இணையவாசல் மூலம் மாண வர்கள் இலவசமாக விண்ணப்பம் செய்யலாம். இதன் மூலம் நிதி பிரச்சினை உள்ள மாணவர்களும் பள்ளி நேரடிச் சேர்க்கைப் பயிற்சி யின்கீழ் விண்ணப்பம் செய்யலாம். பல்கலைக்கழகச் சேர்க்கை மதிப் பீட்டுத் திட்டத்துக்கான மாற்றங் கள் 2020ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும். மாற்றம்படி, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயில விண்ணப்பம் செய்யும் பலதுறைத் தொழிற் கல்லூரி பட்டதாரிகளின் ஜிசிஇ சாதாரண நிலை முடிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாது. தற்போது மொத்த மதிப்பீட்டில் 20 விழுக்காடு ஜிசிஇ சாதாரண நிலை முடிவுகள் இடம்பெறுகின்றன. 2020லிருந்து பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டதாரிகளின் பலதுறைத் தொழிற்கல்லூரி சராசரி மதிப்பளவைப் புள்ளி களுக்கு (GPA) மட்டும் முக்கியத் துவம் கொடுக்கப்படும்.