கட்டட வெளிப்பூச்சு தகடுகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக அதற்கான விதி முறைகள் கடுமையாக்ப்படு கின்றன. இதைத் தொடர்ந்து அவற்றுக் கான பரிசோதனைகளும் கடுமை யாகப்படுவதுடன் வெளிப்பூச்சு தகடுகள் தயாரிக்கும் பட்டறைகள் கட்டாய பரிசோதனைகளுக்கு உட் படுத்தப்படவும் உள்ளன. மேலும், இந்த வெளிப்பூச்சு தகடுகள் கட்டடங்களில் தவறு தலாக பொருத்தப்பட்டிருந்தால் இதற்குக் காரணமான நபர்களை பொறுப்பாக்கும் விதமாக சட்ட திருத்தம் கொண்டு வரவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பரிந்துரைக்க உள்ளது. இந்த பரிந்துரைகளைத் தொடர்ந்து அதிகாரிகள் இதற்கான சட்ட திருத்தத்தை அடுத்த முதல் பாதியில் கொண்டுவருவர் என்று உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்று தெரிவித்தார்.
"எங்களிடம் தர நிலைகள் உள்ளன. அந்தத் தர நிலைகளை ஒத்திருக்க வேண்டும் இந்த வெளிப்பூச்சு தகடுகள். ஏனெனில், இது தீச் சம்பவம் ஏற்படும்போது எவ்வளவு வேகமாக தீ பரவக்கூடும் என்பது பற்றியது. "தீ பரவலைத் தடுக்கும் வெளிப்பூச்சு தகடுகளை நாம் பயன்படுத்த வேண்டும்," என்று திரு சண்முகம் நேற்று செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டியில் கூறினார். கட்டட வெளிப்புறத்தில் வழக்கமாக பயன்படுத்தப்படும் அலு மினிய தகடுகளின் பாதுகாப்பு குறித்து பிப்ரவரி மாதம் நடந்த மறுஆய்வின்போது இந்த விதி முறைகள் பரிந்துரைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு மே மாதம் டோ குவான் ரோட்டில் உள்ள கட்டம் ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்து குறித்த விசாரணையில் அந்தக் கட்டடத்தில் முறையற்ற பொருட் கள் பொருத்தப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை மேற்கொண்ட சோதனையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்தப் புதிய பரிந்துரைகள் இடம்பெற்றன. இதன்படி, வெளிப்பூச்சு தகடு கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டறைகளின் தயாரிப்பு முறைகள் சோதனை செய்யப்படும். இவற்றை சோதனையிடும் அதி காரிகள் வெளிநாடுகளில் உள்ள பட்டறை கள் உட்பட அனைத்து பட்டறை களையும் சோதனையிட்டு தர நிலைகளை உறுதி செய்வர்.

