சிங்கப்பூரின் ஆகப் பெரிய செயற்கைப் பவளப் பாறை நேற்று சிஸ்டர்ஸ் தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் பொருத்தப்பட்டது. அவ்விடத்தில் மொத்தம் எட்டு பவளப் பாறைகள் பொருத்தப்பட இருக்கின்றன. அவற்றின் ஒரு பகுதிதான் நேற்று பொருத்தப்பட்ட பவளப் பாறை. எட்டுப் பவளப் பாறைகளும் இவ்வாண்டு இறுதிக்குள் முழுமையாகப் பொருத்தப்படும். ஒவ்வொரு பவளப் பாறையும் பத்து மீட்டர் உயரம் கொண்டது. அவற்றில் பவளங்கள் வளர்வதோடு மற்ற கடல் உயிரினங்களும் வசிக்கும் இடமாக உருவெடுக்கும் என்று நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் கூறினார்.
பவள வளர்ச்சியை மேம்படுத்த பொருத்தப்பட்ட பவளப் பாறை
1 mins read

