உணவங்காடி நிலையங்களில் கடை நடத்துவது தொடர்பிலான மாற்றங்கள் அடுத்த ஆண்டு முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வரும் என தேசிய சுற்றுப்புற வாரியம் அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் சமூக அமைப்புகள் நடத்தும் உணவங் காடி நிலையங்கள் பின்பற்ற வேண்டிய படிநிலைகளாக அமை வதுடன் அந்த நிலையங்கள் செயல்படுவது குறித்த கூடுதல் விவரங்களை தேசிய சுற்றுப்புற வாரியத்துக்கு வழங்குவதாக அமையும் என்று வாரியம் குறிப் பிட்டது.
பாதுகாப்பு வைப்பீட்டுத் தொகை, வாடகை முறிவு அறிவிப்புக் காலம், கடை செயல்படும் நாட்கள், நேரம் போன்ற அம்சங்களில் இந்த மாற்றங்கள் இருக்கும். இந்த மாற்றங்களின்படி, வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மேல் கடை நடத்துவது, எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக கடையைச் செயல்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். ஆனால், கடைக்காரர்கள் அதனை எவ்வாறு மேற்கொள்கின் றனர், மனிதவளம் போதுமான தாக இருக்கிறதா என்பது போன்ற விவரங்களை அங்காடி களின் நடத்துனர்கள் தெரிந் திருக்க வேண்டும் என்று வாரியம் குறிப்பிட்டது.

