விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ் கிகள் எனப் பலதரப்பட்ட ராணுவ வாகனங்கள் இவ்வாண்டின் சிங்கப்பூர், இந்தியாவின் இரு தரப்பு கடல்துறைப் பயிற்சியில் சாதனை அளவு எண்ணிக்கையில் இடம்பெற இருக்கின்றன. இரு நாட்டுக் கடற்படைகளின் இவ்வருடாந்தர பயிற்சி குறித்துத் தற்காப்பு அமைச்சு நேற்று தகவல் வெளியிட்டது. சிங்கப்பூர், இந்தியா இருதரப்பு கடல்துறைப் பயிற்சி (சிம்பெக்ஸ்) 25ஆவது ஆண்டாக நடைபெறவுள்ளது. இதில் சிங்கப்பூர் குடியரசு கடற்படை, இந்திய கடற்படை ஆகியவற்றின் கிட்டத்தட்ட 30 வாகனங்கள் வங்காள விரிகுடா, அந்தமான் கடல் பகுதிகளில் பங்கேற்க உள்ளன.
இன்று முதல் இம்மாதம் 21ஆம் தேதிவரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் இரு நாட்டு கடற்படை வீரர்களும் இணைந்து செயல்படுவர். நேரடி துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகள், கடற்படைப் போருக் குரிய பயிற்சிகள் போன்ற நட வடிக்கைகளில் இரு தரப்பினரும் இணைந்து செயல்படுவார்கள். இரு நாடுகளின் மூத்த கடற் படை அதிகாரிகள் அத்துடன் அதிகாரத்துவ சந்திப்புகளை நிகழ்த்துவர். இரு நாட்டு ராணுவங்களும் பல ஆண்டுகளாக கூட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகின் றன. முதன்முதலில் 1994ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சிம்பெக்ஸ் பயிற்சி கடலடிவழி ஏற்படும் எதிர்ப்பை மட்டும் மையமாகக் கொண்டிருந்தது.
தற்போதைய காலச் சூழலில் நோக்கங்கள், சிக்கல்கள் அதி கரித்துவிட்ட நிலையில் இந்த ஆண்டின் பயிற்சி விரிவாக்கப் பட்டுள்ளது. அவ்வாறு இவ்வாண்டின் சிம்பெக்ஸ் பயிற்சியில் காற்றுவழி, நிலம்வழி, கடலடிவழி ஏற்படக் கூடிய எதிர்ப்புகள் தொடர்பான போர்ப்பயிற்சிகள் இடம்பெறுகின் றன. 2003ஆம் ஆண்டில் நடத்தப் பட்ட பயிற்சியின்போது நகரும் நீர்மூழ்கியை நோக்கிக் கண்ணி வெடியை வெற்றிகரமாகப் பாய்ச் சியது சிங்கப்பூர் கடற்படை. இதன்வழி இச்சாதனையைப் படைத்த முதல் தென்கிழக்காசிய கடற்படை என்ற பெருமையையும் பெற்றது.

