வாக்குவாதத்தின்போது தனது காதலியைக் கொன்ற ஆடவர் ஒருவருக்கு நீதிமன்றம் 13 ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருக்கிறது. 29 வயது நியோ சுன் செங், பூன் லே வட்டாரத்திலுள்ள தனது வீட்டுக்கு வெளியில் 23 வயது குமாரி சோ யுவன் லின்னைக் கழுத்தில் மடக்கக்கூடிய கத்தியால் குத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டில் சந்தித்த இவர்கள் காதலர்களாக இருந்தபோதும் மற்றவர்களுடன் உறவு மேற்கொள்ள இருவருமே சம்மதித்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஆயினும் முன்னைய விமான பணியாளராக இருந்த குமாரி சோ மற்ற ஆடவர்களுடன் உறவு கொண்டதற்காக அவரைக் கொன்றார். இந்தச் சம்பவம் நோக்கமில்லாக் கொலை என நீதிமன்றம் வகைப்படுத்தியுள்ளது.
பூன் லேயில் முன்னாள் காதலியைக் கொன்ற ஆடவருக்கு 13 ஆண்டு சிறை
1 mins read

