சன்டெக் சிட்டி வழியாகச் செல்லும் பேருந்து சேவைகளான 70M, 111, 113, 162M 502 ஆகியவை திங்கள் முதல் வெள்ளி வரை மூன்று பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்லும். 33ஆம் ஆசியான் உச்சநிலை கூட்டத்திற்காகவும் அதன் தொடர்பான மாநாட்டுக்காகவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புரோமனாட் நிலைய பேருந்து நிறுத்தம் (020161), ரிட்ஸ் கார்ட்ன் பேருந்து நிறுத்தம் (02171), சன்டெக் மாநாடு அரங்க பேருந்து நிறுத்தம் (02151) ஆகியவை இந்த நிறுத்தங்கள். மாநாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய, சாலையில் வாகனச் சோதனைகள் நடத்தப்படும் என்றும் மாநாட்டு வளாகத்தில் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படும் என்றும் சிங்கப்பூர் போலிஸ் படையும் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் கடந்த வாரம் தெரிவித்தன.
ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தால் ஐந்து பேருந்து சேவைகள் பாதிப்பு
1 mins read

