உட்லண்ட்சில் விபத்து: இரு ஓட்டுநர்கள் காயம்

உட்லண்ட்சில் விபத்து: இரு ஓட்டுநர்கள் காயம்

1 mins read

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் காரும் மருத்துவ உதவி வாக னமும் விபத்துக்கு உள்ளானதில் அவற்றின் ஓட்டுநர்கள் காயமடைந்தனர். உட்லண்ட்ஸ் அவென்யூ 5க்கும் உட்லண்ட்ஸ் அவென்யூ 6க்கும் இடையிலான சாலை சந்திப்பில் இந்த விபத்து நடந்தது. 37 வயதும் 44 வயதுமான இந்த இரண்டு ஓட்டுநர்கள் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளதாகப் போலிசார் தெரிவித்தனர்.

கறுப்பு நிற 'மெர்சிடிஸ்' கார், சாலைச் சந்திப்பில் வலப்பக்கமாகத் திரும்பும்போது எதிர்வரும் மருத்துவ உதவி வாகனம் இதனை மோதியத்தைக் காட்டும் காணொளி ரோட்ஸ்.எஸ்ஜி என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டது. இந்தக் காணொளி மற்றொரு வாகனத் திலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மோதலின் தாக்கத்தால் கறுப்பு கார், நடைபாதையில் உள்ள சாலைத் தடுப்பின்மீது தள்ளப்பட்டது. மருத்துவ உதவி வாகனத்தின் முன் பகுதியும் கடுமையாக சேதமடைந்தது. மருத்துவ உதவி வாகனத்திற்குள் யாரும் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. விசாரணை தொடர்கிறது.