போக்குவரத்து நிறுவனமான கம்ஃபட்டெல்குரோ தனது வளாகத்தில் மின்சார கார்களுக்கென முதல் அதிவிரைவு மின்னூட்டு மையத்தைத் திறந்துள்ளது. பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட இம்மையம் பிரேடல் சாலை தலைமையகத்தில் 24 மணி நேரமும் இயங்கும். சாதாரண மின்னூட்டு மையம்வழி ஒரு மின்சார கார் முழுமையாக மின்னூட்டப்பட நான்கு மணிநேரம் அல்லது அதற்கு மேல் ஆகும். ஆனால் இந்த அதிவிரைவு மின்னூட்டு மையத்தால் அரை மணி நேரத்தில் வேலை முடிந்துவிடும். இப்புது மின்னூட்டு மையம் ஒரே வேளையில் இரு வாகனங்களுக்கு மின்னூட்டக்கூடிய ஆற்றலும் பெற்றது என்று நிறுவனம் கூறியது.
மின்சார கார்களுக்காக திறக்கப்பட்ட முதல் அதிவிரைவு மின்னூட்டு மையம்
1 mins read

