நகர மன்றத்தின் முன்னாள் நிர்வாகி மீது வழக்கு விசாரணை

நகர மன்றத்தின் முன்னாள் நிர்வாகி மீது வழக்கு விசாரணை

1 mins read

அங் மோ கியோ நகர மன்றத்தின் முன்னாள் நிர்வாகி வோங் சீ மெங் மீது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் கழிவு விலையில் கம்பெனி கார் ஒன்று அவரிடம் விற்கப்பட்டதாகவும் அதை விற்றவரின் நிறுவனத்திற்கு அதன்வழி வர்த்தக ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு அமையும் என்றும் நீதிமன்றத்தில் நேற்று கூறப்பட்டது. சந்தை விலையைவிட $13,500ஐ குறைத்து காரை வொங்கிடம் விற்றதைப்பற்றி 2015ஆம் ஆண்டில் சியா சின் லான் தம் வர்த்தக பங்காளி திரு டே எங் சுவானிடம் கூறியிருந்தார். வழக்கு விசாரணையின் எட்டாவது நாளில் திரு டே சாட்சி அளித்தபோது தம்மிடம் கூறப்பட்ட தகவல்பற்றி கூறினார். சியாவும் வோங்கும் $107,000 தொகை லஞ்சம் வாங்கியதன் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.