$2.9 பில்லியன் நன்கொடை பெற்றுள்ள அறநிறுவனங்கள்

1 mins read

சிங்கப்பூரில் உள்ள அறநிறுவனங் கள் 2016ஆம் ஆண்டில் $2.9 பில்லியன் நன்கொடை பெற்றதாக நேற்று வெளியிடப்பட்ட அற நிறுவன ஆணையத்தின் 2017 வருடாந்தர அறிக்கை தெரிவித்து உள்ளது. இத்தொகையே ஐந் தாண்டுகளில் ஆக அதிகமானது. இத்தொகையில் தேவாலயங் கள், கோவில்கள் போன்ற சமயம் சார்ந்த குழுக்கள் $1.1 பில் லியனுக்குக் கணக்கு காட்டிய தாகவும் எஞ்சிய நன்கொடைகள் கல்வி, சமூகம், சுகாதாரம் முதலிய துறைகளுக்குப் பயன் படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டது. 2016ஆம் ஆண்டில் கிடைத்த மொத்த நன்கொடைத் தொகை 2015இல் பெறப்பட்ட $2.7 பில்லியனைவிட ஐந்து விழுக்காடு அதிகம். பதிவுசெய்யப்பட்ட அறநிறு வனங்கள் சென்றாண்டு மொத் தம் 2,263ஆக இருந்தன.

இவற்றில் 39 அறநிறுவனங்கள் புதி தாக இணைந்தவை. அத்துடன் அறநிறுவனங்களில் பாதி எண்ணிக்கை சிறிய அள வில் இயங்குபவை. அவற்றிற் குக் கிடைக்கும் வருமானம் $250,000க்கும் குறைவே. அறநிறுவன ஆணையம் கடந்த ஆண்டில் நன்கொடைத் துறையை மேம்படுத்தும் பொருட்டு வெவ்வேறு திட்டங்களையும் தொடங்கியது. பெறப்படும் நிதிகள் அனைத்திற்கும் முறையே கணக்கு காட்டப்படவேண்டும் என்பதையும் ஆணையம் உறுதி செய்து வருகிறது. இதன் தொடர்பில் "இன்றைய மாறும் சூழலில், அறநிறுவனங்கள் நல்ல ஆட்சிமுறையுடனும் பொறுப் புடனும் இயங்க நாங்கள் அதி காரம் அளிக்க விரும்புகிறோம்,'' என்று அறநிறுவன ஆணையாளர் டாக்டர் அங் ஹக் செங் அறிக்கைவழி கூறியிருந்தார்.