ஆசியான் கடற்பகுதியில் போர்க் கப்பல்களைப் பார்க்க மலேசியா வுக்கு விருப்பம் இல்லை என்றும் ஆனால் சிறிய ரக சுற்றுக்காவல் படகுகள் செல்லலாம் என்றும் அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார். இந்தோ-பசிபிக் உத்தி குறித்த அமெரிக்காவின் கொள்கை பற்றிய ஆசியானின் புரிந்துணர்வும் நம் பிக்கை பற்றிக் கேட்கப்பட்டபோது டாக்டர் மகாதீர், அமெரிக்காவின் ஏழாவது கடற்படையை இங்கு அனுப்புவது அந்த உத்தியில் இடம்பெறவில்லை என்றால் ஆசி யான் அதனை வரவேற்கும் என்று பதிலளித்தார்.
ஏழாவது கடற்படை என்பது அமெரிக்காவின் பசிபிக் கடற் படையின் ஒரு பகுதியாகும். ஆசியான் உச்சநிலைக் கூட்டத் திற்கு இடையே பேசிய டாக்டர் மகாதீர், ஆசியான் வட்டாரக் கடற் பகுதிகளில் பெரிய போர்க் கப்பல் கள் இருக்கக்கூடாது என்ற தனது நாட்டின் நிலைப்பாட்டை வலியுறுத்தினார். "கடற்கொள்ளைச் சம்பவங் களைக் கையாள சிறிய காவல் படகுகள் தேவை. ஆனால் பெரிய போர்க் கப்பல்களால் சம்பவங்கள் நிகழுமாயின் அவை பதற்றத்தை அதிகரிக்கலாம்," என டாக்டர் மகாதீர் கூறினார்.

