ஆசியான் உச்சநிலைக் கூட்டம்: சிங்கப்பூருடன் தொடர்புடைய கனடியப் பிரதமர் ட்ருடோ

ஆசியான் உச்சநிலைக் கூட்டம்: சிங்கப்பூருடன் தொடர்புடைய கனடியப் பிரதமர் ட்ருடோ

1 mins read
ce72a30a-97cc-418b-8f45-8f9727759932
-

ஆசியான் உச்சநிலைக் கூட்டம் தொடர்பான இதர கூட்டங்களில் கலந்துகொள்ள சிங்கப்பூர் வந்துள்ள கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, நேற்று பிற்பகலில் ஃபோர்ட் கேனிங் பூங்காவுக்குச் சென்றார். 1819ஆம் ஆண்டு முதல் 1823ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் முதலாவது பிரிட்டிஷ் தலைமை அதிகாரியும் பிரிட்டஷ் படைகளின் தளபதியுமாக இருந்த மேஜர் வில்லியம் ஃபக்குஹாருக்கும் அவரது மனைவியான நோனியோ கிளமெண்ட்டுக்கும் பிறந்தவர் எஸ்தர் ஃபக்குஹார் பெர்னார்ட்.

திருவாட்டி எஸ்தரின் நினைவுக் கல்வெட்டு ஃபோர்ட் கேனிங் குன்றின் சுவர் ஒன்றில் பதிக்கப்பட்டுள்ளது. திருவாட்டி எஸ்தருக்குப் பிறகு வந்த ஐந்தாம் தலைமுறையினரில் ஒருவர்தான் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ. மேஜர் ஃபக்குஹாருக்கும் ஃபோர்ட் கேனிங் குன்றுக்கும் ஒரு சிறப்பு தொடர்பு உள்ளது. 1819ல் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்சுடன் சிங்கப்பூரில் வந்திறங்கியதும் மேஜர் ஃபக்குஹார் பிரிட்டனின் யூனியன் ஜேக் கொடியை ஃபோர்ட் கேனிங் குன்றில்தான் ஏற்றினார்.

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ நேற்று பிற்பகல் ஃபோர்ட் கேனிங் பூங்காவில் உள்ள தனது ஐந்தாம் தலைமுறைக்கு முந்திய கொள்ளுப்பாட்டியின் நினைவுக் கல்வெட்டை காணொளி எடுத்து தமது மகனுக்கு அனுப்பி வைக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்