சீனாவுடன் பணியாற்றும்' சீனாவுடன் தடையற்ற வர்த்தக உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள தனது நாடு அதனுடன் சேர்ந்து பணியாற்றும் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்தார். ஆசிய-பசிபிக் உச்சநிலைக் கூட்டத்தின்போது திரு ட்ருடோ இவ்வாறு கூறினார். கடந்த ஆண்டு டிசம்பரில் கனடியப் பிரதமர் பெய்ஜிங்குக்குப் பயணம் மேற்கொண்டார். ஆனால் இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பான பேச்சுகள் தொடங்கப்படுவதற்கு இரு நாடுகளும் இணக்கம் காணத் தவறி விட்டன.
இதற்கிடையே, ஆசியான் உச்சநிலைக் கூட்டத்துக்கு வந்திருக்கும் தலைவர்களுள் 46 வயதாகும் கனடியப் பிரதமர் ட்ருடோ, ஆக இளைய தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார். அதே வேளையில், சுவாரஸ்யமான காலுறைகளை அணிந்துகொள்வதில் அவர் உலகத்தின் கவனத்தைக் கவர்ந்துள்ளார். உதாரணத்துக்கு, நேற்று என்யுஎஸ் பல்கலைக்கழக கலாசார மையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், கனடியப் பிரதமர் ஐந்து வண்ண வடிவமைப்புகளைக் கொண்ட காலுறைகளை அணிந்திருந்தார் (படம்).

