ஸ்பைஸ் உணவகத்தின் உணவை ஒரு தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது சாப்பிட்ட 'செட்ஸ்' நிறுவன அதிகாரி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உயிரிழந் தார். திருமணமாகி இரு சிறு வயது பிள்ளைகளுக்குத் தந்தையான திரு ஃபட்லி சலே, 'ஸ்பைஸ்' உணவகத் தின் ரிவர் வேலி கிளை வழங்கியிருந்த உணவுப் பொட்டலத்தை உட்கொண்ட பின் செங்காங் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். அவரின் மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் பிரேத பரி சோதனைக்காக வகைப் படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது. இது வரையில் உணவகத்தின் சாப்பாட்டை உண்டு பாதிக்கப்பட்ட 72 பேரில், 46 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் நேற்று முன்தினம் இரவு பத்து மணி நிலவரப்படி இன்னும் ஒன்பது பேர் மருத்துவமனையில் உள்ளனர் என்றும் அமைச்சு தெரிவித்தது.
'ஸ்பைஸ்' உணவைச் சாப்பிட்டு ஒருவர் மரணம்
1 mins read

