புகையிலை கடத்தியவருக்கு ஐந்து வார சிறைத் தண்டனை, அபராதம்

புகையிலை கடத்தியவருக்கு ஐந்து வார சிறைத் தண்டனை, அபராதம்

1 mins read
e7a5ae48-bed9-45c2-a8a7-7a3f289af6ec
-

வாகனத்தின்வழி 4,560 புகை யிலைப் பொட்டலங்களைச் சென்ற ஆண்டு சிங்கப்பூருக்குள் கொண்டு வந்த 41 வயது கார்த்திகேசி செல்லதுரைக்கு நேற்று நீதிமன்றத்தில் ஐந்து வாரச் சிறைத் தண்டனையும் $250 அபராதமும் விதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று துவாஸ் சோதனைச்சாவடிவழி சிங்கப்பூருக் குள் வந்த கார்த்திகேசியின் வாகனத்தை குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது வாகனத்தின் பின் கதவு பகுதியிலும் பின் ஒலிப்பெட்டி பகுதிகளிலும் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 2,460 'ஹன்ஸ் சப் கைனி' புகையிலைப் பொட்டலங் களை அவர்கள் கைப்பற்றினர்.

'கைனி' புகையிலை வாயில் போட்டு மெல்லுவதற்குரியது. ஈரப் பதம் கொண்ட கரும்பழுப்பு புகையிலையுடன் சுண்ணாம்பு கலக்கப்படும்போது ஒரு தனிப் பட்ட மணத்தைத் தரும் என்று சுகாதார அறிவியல் ஆணையம் கூறியது. ஆணையம் மேற்கொண்ட விசாரணையின் மூலம் கார்த்திகேசி சென்ற ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று 2,100 பொட்டலங்களைக் கடத்தியதும் தெரிய வந்தது. சிங்கப்பூரில் தடை செய்யப் பட்ட புகையிலையைக் கடத்த முயலும் ஒவ்வொரு முறைக்கும் $250 கிடைக்கும் என்று மலேசியாவில் உள்ள ஒருவர் அவருக்குத் தெரிவித்ததாக கார்த்திகேசி கூறினார். அவர் கடத்திய 4,560 பொட் டலங்களின் விலை $,4560க்கும் $9,120க்கும் இடையே மதிப்பிடப் படுகிறது.

வாகனத்திலிருந்து அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட 2,460 'ஹன்ஸ் சப் கைனி' புகையிலைப் பொட்டலங்கள். படம்: குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் ஃபேஸ்புக் பக்கம்