இரு வெவ்வேறு சம்பவங்களில் இரு ஆடவர்களுக்குக் கடுமையான காயங்களை விளைவித்த 29 வயது முகம்மது அய்டில் ருஸ்னினுக்கு ஈராண்டு சிறையும் மூன்று பிரம்படி களும் நேற்று விதிக்கப்பட்டன. கடந்த மே மாதத்தில், அய்டில் தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனால், அய்டில் தப்பித்துச் சென்றார். நான்கு மாதங்களுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். 2016ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி போட் கீயில் தனது தம்பி முகம்மது சைஃபுல், நண்பர் ஷுக்ரி ரெஸா ஆகியோர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது 18 வயது மாணவர் முகம்மது லுக்மான் அல்-ஹக்கீமுடன் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மூவரும் லுக்மானை சரமாரியாகத் தாக்கினர்.
பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லூக்மானின் மண்டையோட்டிலும் முகத்திலும் எலும்பு முறிவுகள் ஏற்பட் டது தெரிய வந்தது. ஷுக்ரிக்கும் சைஃபுல்லுக்கும் ஏற்கெ னவே தண்டனைகள் விதிக்கப்பட்டு விட்டன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில் இரவு விடுதி ஒன்றில் வேலை செய்த அய்டில், குடிபோதையில் இருந்த பங்ளாதேஷ் நாட்ட வரான 31 வயது அல் அமின் சையத் அலியை விடுதியில் இருந்து வெளியே அழைத்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து அங்கு தனது நண்பர்களை அழைத்து வந்த அல் அமின், அய்டிலிடம் வாக்குவாதம் செய்தார். அது பின்னர் கைகலப்பாக மாறியதும், அய்டில் ஒரு நீண்ட கழியைக் கொண்டு அல் அமினைத் தாக்கி னார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அல் அமினுக்கும் மண்டையோடு உடைந்திருந்தது தெரிய வந்தது.

