எஸ்எம்ஆர்டி மறுசீரமைக்கப்பட்டு, புதிய பொறியியல் குழுமம் அமைக்கப்படும்

எஸ்எம்ஆர்டி மறுசீரமைக்கப்பட்டு, புதிய பொறியியல் குழுமம் அமைக்கப்படும்

1 mins read
07d66a61-f621-43a4-9ffc-efb61241b00d
-

எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஐந்து பிர தான பிரிவுகளாக மறுசீரமைக்கப் படும் என்றும் அதில் புதிதாக உருவாக்கப்படும் பொறியியல் குழுமமும் அடங்கும் என்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி நியோ கியன் ஹோங் தெரிவித் துள்ளார். ரயில்கள், பொறியியல், சாலை கள், அனுபவம், நிறுவன சேவை கள் ஆகியவையே அந்த ஐந்து குழுமங்கள். புதிய பொறியியல் குழுமம் தனது நிறுவனத்துக்கு ஒரு தெளி வான கண்ணோட்டத்தை அளிக் கும் என்றும் திரு நியோ நேற்று கிம் சுவான் பணிமனைக்கு வரு கையளித்தபோது செய்தியாளர்களிடம் கூறினார்.

கிம் சுவான் பணிமனையில் எஸ்எம்ஆர்டியின் புதிய ரயில் நடவடிக்கைகள் மையம் அமைந்தி ருக்கும் என்றும் அது அடுத்த ஆண்டில் தனது செயல்பாட்டைத் தொடங்கும் என்றும் திரு நியோ சொன்னார். "எஸ்எம்ஆர்டி பொதுப் போக்கு வரத்து சேவையை மக்களுக்கு வழங்குகிறது. எங்கள் அடிப்படை வர்த்தகம் ரயில் சேவைகளை நிர் வகித்து, அவற்றை நடத்துவது. நமது ரயில் சேவைகளின் தரமும் நம்பகத்தன்மையும் சிங்கப்பூரர் களின் வாழ்க்கையில் ஒரு தாக் கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

எஸ்எம்ஆர்டியின் கிம் சுவான் பணிமனைக்கு நேற்று வருகையளித்த எஸ்எம்ஆர்டியின் தலைமை நிர்வாக அதிகாரி நியோ கியன் ஹோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்