குத்தகையைத் திரும்ப வாங்கிக் கொள்ளும் (எல்பிஎஸ்) திட்டத்தின் விரிவாக்க விவரங்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தயாராகி விடும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரி வித்துள்ளார். ஐந்தறை மற்றும் அதற்கும் பெரிதான வீடுகளையும் இணைத் துக்கொள்ளும் இத்திட்டத்தின் விரிவாக்கம் பற்றி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்டன. 'எல்பிஎஸ்' திட்டத்தின்படி, 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உள்ள வீட்டு உரிமையாளர்கள் இதர விதிமுறைகளுக்கும் தகுதி பெற்றால் தங்கள் வீட்டின் ஒரு பகுதியை வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் விற்கலாம்.
இந்த விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகை வீட்டு உரிமையாளரின் மத்திய சேமநிதி ஓய்வுக்கால கணக்கில் நிரப்பப் படும். பின்னர் அவர் அந்தப் பணத்தைக் கொண்டு, வாழ்நாள் முழுதும் வருமானம் ஈட்டித்தரும் 'சிபிஎஃப் லைஃப்' திட்டத்தை வாங்கிக் கொள்ளலாம். வீவகவின் மூத்த வீட்டு உரி மையாளர்களுக்கு தங்கள் ஓய்வு காலத்துக்குத் தேவையான நிதித் திட்டமிடுதல் பற்றி தனது வலைப் பதிவில் விவாதிக்கும்போது, திரு வோங் 'எல்பிஎஸ்' திட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
எல்பிஎஸ்' திட்டத்தின் மூலம் வீட்டு உரிமையாளருக்கு, அதே அளவிலான இன்னொரு வீட்டுக்கு மாறுதல், வீட்டை வாடகைக்கு விடுதல் போன்ற இதர வழிகளைக் காட்டிலும் இத்திட்டத்தில் தொகை கூடுதலாகக் கிடைக்கும் என்று கூறிய அமைச்சர், இதில் ஒரு சலுகை என்னவென்றால் அந்த வீட்டில் அவர்கள் தொடர்ந்து வசிக்கலாம் என்றார். ஒய்வுக்காலத்துக்குத் திட்டமிடுதல் போன்ற இதர வழிகள் சிக்கல் மிக்கதாக இருக்கும் என்பதால், முதியவர்கள் அவற்றைப் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் தக வல்களை வழங்குவது பற்றி யோசிக்குமாறு வீவ கழகத்தைத் தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக திரு வோங் சொன்னார். தாங்கள் பதவி ஓய்வு பெறும் போது அவர்களுக்குரிய வெவ் வேறு திட்டங்கள் மூலம் எந்த அளவிலான தொகை கிடைக்கும் என்பதை விளக்கும் தகவல்களை வீவக அளிக்கலாம் என்றும் அமைச்சர் யோசனை கூறினார்.

