ஜோகூரில் நடைபெற்ற குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மலேசியாவுக்குள் குடிநுழைவு அனுமதி இன்றி நுழைந்த சிங்கப்பூரர்கள் இருவருக்கு தலா 3,000 ரிங்கிட் ($985) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 21 வயதான இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்ட பிறகு குடிநுழைவு தடுப்பு நிலையத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்களுக்கு அபராதத்தை விதித் தார்.
கடந்த மாதம் 20ஆம் தேதி அதிகாலை வேளையில் சுல்தான் இஸ்கந்தர் சுங்க, குடிநுழைவு சோதனைச்சாவடி கட்டடத்தில் உள்ள குடிநுழைவுக் கூடத்தில் நிற்காமல் அவர்கள் சென்றனர். அடுத்த நாள் அவர்கள் இருவரும் அதே சோதனைச்சாவடி மூலம் மலேசியாவை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டனர். இருவ ரும் தங்கள் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டனர்.

