எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் அக்டோபரில் 8.3% அதிகரிப்பு

எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் அக்டோபரில் 8.3% அதிகரிப்பு

1 mins read

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் அக்டோபர் மாதத்தில் 8.3% அதிகரித்துள்ளது. மின்சாரம் அல்லாத ஏற்றுமதிகள் முன்னைய மாதத்தில் 12.8% கூடியது. மின்னணுவியல் பொருட்கள் முன்னைய மாதத்தில் 3.5% சரிந்தது என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது. சீனா, தைவான், மலேசியா ஆகிய நாடுகள் தவிர்த்த தலைசிறந்த 10 சந்தை களுக்கான ஏற்றுமதி கடந்த மாதத்தில் ஏற்றம் கண்டன.