நடக்கவும் சைக்கிள் ஓட்டவும் விருப்பம் என ஆய்வில் தகவல்

நடக்கவும் சைக்கிள் ஓட்டவும் விருப்பம் என ஆய்வில் தகவல்

1 mins read

சிங்கப்பூரில் கார் ஓட்டுவதைக் காட்டிலும் நடப்பது, சைக்கிளோட் டுவது, ஸ்கூட்டர் ஓட்டுவது ஆகி யவற்றையே அதிகம் விரும்புவதாக மூவரில் இருவர் கருத்துத் தெரி வித்துள்ளனர். 'நிலப் போக்குவரத்து பெருந் திட்டம் 2040' தொடர்பாக நடத்தப் பட்ட கருத்தாய்வுகளில் பங்கேற்ற அவர்கள் இதனைத் தெரிவித்தனர். மேலும், நிலப் போக்குவரத்து என்பது வசதியானதாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாகத் தென்பட்டது. அதற்கு அடுத்த விருப்பங்களாக எளிதாக மாறிச் செல்லும் வசதி, விரைவான பயணம் ஆகியன உள்ளன. பொதுமக்கள் தெரிவித்திருக் கும் இந்தக் கருத்துகள் பெருந்திட் டத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நேற்று செய்தியாளர்களி டம் கூறினார்.

கார் வைத்திராத வகையிலான போக்குவரத்துத் தீர்வுகளை மூவ ரில் இருவர் ஆதரித்திருப்பதை அவர் சுட்டினார். "உதாரணமாக நடப்பது, சைக் கிளோட்டுவது, ஸ்கூட்டரில் பய ணம் செய்வது ஆகியவற்றுக்கு அவர்கள் முன்னுரிமை தருகின்ற னர். "அதேநேரம் கார்களை வித்தி யாசமான முறைகளில் அவர்கள் பயன்படுத்த விரும்புகின்றனர். மற்றவருடன் பகிர்ந்துகொள்வது, வாடகைக்கு வாகனங்களை எடுப் பது போன்றவை அந்த முறைகள்," என்றார் நிலப் போக்குவரத்து பெருந்திட்ட ஆலோசனைக் குழு வின் தலைவருமான டாக்டர் ஜனில். இதற்கிடையே பயணிகள் மத் தியில் மேலும் அதிகமான கரு ணைமிக்க போக்கு தேவை என் றும் கருத்தாய்வுகளில் பங்கேற்ற 5,000 பேரில் பெரும்பாலானவர்கள் கூறியிருந்தனர். வெவ்வேறு வழி களில் இந்தக் கருத்துகள் திரட்டப் பட்டன.